தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு மத்தியில் முகுல் வாஸ்னிக் ம.பி பொறுப்பில் இருந்து நீக்கம்: சோனியா காந்தி உத்தரவால் பரபரப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் பணிகள் நடைபெறும் நிலையில் மத்திய பிரதேச மாநில பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக்கை அந்த பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விடுவித்து உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக். 17ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக மீண்டும் ராகுல்காந்தி தலைவராக தேர்வு செய்யப்படுவாரா? அல்லது கட்சியின் மூத்த தலைவர்கள் எவரேனும் தலைவராக தேர்வு செய்யப்படுவார்களா? என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ராகுல்காந்தி ஒருவேளை தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்றால் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. இதற்கிடையில் நேற்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முக்கியமான நடவடிக்கை ஒன்றை நேற்று எடுத்துள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான முகுல் வாஸ்னிக்கை மத்திய பிரதேச மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவித்துள்ளார். அவருக்கு மாற்றாக, ஜே.பி.அகர்வாலை மாநிலப் பொறுப்பாளராக நியமித்துள்ளார். சோனியா காந்தியின் இந்த நடவடிக்கையால், தலைவர் பதவிக்கான போட்டி வேட்பாளர்கள் பட்டியலில் முகுல் வாஸ்னிக்கின் பெயரும் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘ராகுல் காந்தி, அசோக் கெலாட் போன்ற தலைவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றால், மாற்று வேட்பாளராக முகுல் வாஸ்னிக் களம் இறக்கப்படுவார். அதனால் அவர் மத்திய பிரதேச பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்’ என்ற கூறினர். மற்றொரு தரப்பு மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘காங்கிரஸ் பொதுச் செயலாளராக முகுல் வாஸ்னிக் நீடிப்பார். அவர் தலைவர் பதவிக்கான போட்டியில் இல்லை’ என்றனர். இதற்கிடையே மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே.பி.அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு மத்தியில் முகுல் வாஸ்னிக் ம.பி பொறுப்பில் இருந்து நீக்கம்: சோனியா காந்தி உத்தரவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: