சோத்துப்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி

மதுராந்தகம்: சித்தாமூர் ஒன்றியம் சோத்துப்பாக்கம் ஊராட்சியில், ‘நம்ம ஊரு சூப்பரு’நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோத்துப்பாக்கம் ஊராட்சி இங்கு எழில்மிகு கிராமங்களை உருவாக்கும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக, ‘நம்ம ஊரு சூப்பரு’நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் மா.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முழு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில், சித்தாமூர் ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், முழு சுகாதார திட்ட சித்தாமூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் அருணகிரி, ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தினை மேம்பாடு செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.ஊராட்சிகளில் உள்ள பொது இடங்களிலும் மற்றும் அனைத்து அரசு கட்டிடங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள், பேருந்து நிறுத்தங்கள், குளம் குட்டைகள், பொது கிணறுகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் தன்னார்வர்களை கொண்டு ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, சோத்துப்பக்கத்தில் உள்ள விநாயகர் கோயில் குளம் சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. மேலும், இங்கு உள்ள அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ – மாணவியர்கள், பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு நம்ம ஊரு சூப்பரு என்று வைக்கப்பட்டிருந்த பேனர் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும், கிராமத்தின் அனைத்து பகுதிகளையும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்….

The post சோத்துப்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: