தேசிய கொடியை வாங்க மறுத்த அமித்ஷா மகன்; எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்திய போது, அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தேசியக் கொடியை வாங்க மறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். இந்தியா வெற்றி பெற்றதும் அவர் கைதட்டி ஆரவாரம் செய்தார். அப்போது, அவரது அருகில் இருந்தவர் ஜெய்ஷாவின் கையில் தேசிய கொடியை கொடுக்க முன் வந்தார். ஆனால், அவர் அதனை வாங்க மறுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ஷா தேசியக் கொடியை வாங்க மறுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஜெய்ஷாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்பட பல்வேறு அரசியல்கட்சியினர் விமர்சித்துள்ளனர்….

The post தேசிய கொடியை வாங்க மறுத்த அமித்ஷா மகன்; எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: