சிவகார்த்திகேயன் படத்துக்கு மதராஸி தலைப்பு

சென்னை: ‘அமரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீலக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் சார்பில் என்.ஸ்ரீலக்‌ஷ்மி பிரசாத் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘மதராஸி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி டைட்டிலும், டீசரும் நேற்று வெளியானது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

Related Stories: