ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் பைக்குகள்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், டியோ ஸ்போர்ட் என்ற லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே சந்தையில் உள்ள டியோ ஸ்கூட்டரை விட இது தனித்துவ தோற்றத்தை கொண்டுள்ளது. சில்வர் மெட்டாலிக் – பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் – பிளாக் கலவையில் சிறப்பான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 110சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 7.6 பிஎச்பி பவரையும் 4,750 ஆர்பிஎம்-ல் 9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மற்றபடி எல்இடி ஹெட்லாம்ப், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என வழக்கமான அம்சங்களை கொண்டுள்ளது.  ஷோரூம் விலையாக சுமார் ₹68,317 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது….

The post ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் பைக்குகள் appeared first on Dinakaran.

Related Stories: