பொத்தேரி ஊராட்சியில் குடிகாரர்கள் கூடாரமாக மாறிவரும் ஊராட்சி; ஒன்றிய தொடக்கப்பள்ளி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இது, 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பள்ளியில், படித்த பலர் பல்வேறு துறையில், உயர் பதவி  வகித்து வருகின்றனர். அப்படிப்பட்ட இப்பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் சிலர் மாலை வேளையில் பள்ளி முடிந்தவுடன் பள்ளி வளாகத்தில் நுழைந்து, பள்ளி கட்டிடத்தின் மாடியில் அமர்ந்து மது அருந்திவிட்டு கும்மாளம் போடுவதோடு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால், காலை நேரத்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் மதுபாட்டில்களின் துகள்கள் காலில் குத்தி காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி நகரமன்ற கவுன்சிலர், ஆசிரியர்கள்   தட்டிக்கேட்டால் முறையாக பதிலளிக்காமல் மீண்டும் மீண்டும் பள்ளி வளாகத்தில் தொடர்ந்து மது அருந்தி சொல்லப்படுகிறது. இதேநிலை நீடித்தால் இப்பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது அருந்துபவர்களின் மதுகூடமாகவும் மாறி விடும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் அச்சப்படுகின்றனர். மேலும், மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படும். எனவே, மறைமலைநகர் போலீசார், இப்பகுதியில்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்கவும், பள்ளி வளாகத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுத்து, மாணவர்கள் சுதந்திரமாக பயில்வதற்கான நிரந்தர தீர்வினை எடுத்திடுமாறு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பொத்தேரி ஊராட்சியில் குடிகாரர்கள் கூடாரமாக மாறிவரும் ஊராட்சி; ஒன்றிய தொடக்கப்பள்ளி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: