இந்தியாவில் முதல்முறையாக பிரபுதேவாவின் நேரடி நடன நிகழ்ச்சி

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக பிரபுதேவாவின் நேரடி நடன நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 22ம் தேதி சனிக்கிழமை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. நடன இயக்குனரும், நடிகருமான ஹரிகுமார் இயக்குகிறார். கலை இயக்குனரும், நடிருகமான கிரண் அரங்குகள் அமைக்கிறார். அருண் ஈவென்ட்ஸ் அருண், வி.எம்.ஆர்.ரமேஷ், ஜி ஸ்டார் உமாபதி, ஜெய்சங்கர் ஆகியோர் நடத்துகின்றனர். இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரபுதேவா, ‘இப்படி ஒரு நிகழ்ச்சியை கனவில் கூட நான் நினைத்து பார்த்தது இல்லை. அருண், ஹரிகுமார் ஆகியோருக்கு நன்றி. இனி எல்லாமே ரசிகர்களின் ஆசீர்வாதம்தான்.

சினிமா போல் என் நடனத்தை எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக இந்நிகழ்ச்சி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்’ என்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ் கலந்துகொண்டனர். பிரபு தேவா ஐபா நிறுவனத்தின் ticket iBa என்ற புதிய இணையதளத்தை துவக்கி வைத்தார். முதல் 25000 டிக்கெட்டுகளை ஐபா நிறுவனத்தின் திட்ட இயக்குனர் பி.கே. அபி மன்னனிடம் வழங்கினார். இந்த டிக்கெட்டுகளை இந்நிறுவனம் 1.5% கேஷ் பேக் உடன் விற்பனை செய்ய இருக்கிறது.

Related Stories: