சென்னை: சமீபத்தில்தான் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ தொடர்பான ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக நயன்தாரா, தனுஷ் இடையே மோதல் வெடித்தது. சில சர்ச்சைகளும் எழுந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா யூடியூபில் கூறியிருப்பதாவது: நாங்கள் இருவரும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில நேரங்களில் நான் நினைத்திருந்தேன். அவரை (விக்னேஷ் சிவனை) நான் திருமணம் செய்திருக்கக் கூடாது.
நான் இப்போதும் குற்ற உணர்வோடு தான் இருக்கிறேன். காரணம், நான் தான் அவரை இந்த உறவுக்குள் இழுத்தேன். நான் அவருடைய வாழ்க்கையில் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கென தனியாக ஒரு பெயர் கிடைத்திருக்கும். இயக்குனர், பாடல் ஆசிரியர், எழுத்தாளர் என எல்லா துறையிலும் அவருக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கும். விக்கி ரொம்ப நல்ல மனிதர். அவரைப்போல யாராவது இருக்க முடியுமா? என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ஒருவர் மீது உள்ள அன்பும், மரியாதையும் அவர்கள் சந்திக்கும் நெகட்டிவ்வான விஷயங்களால் காணாமல் போய்விடுகிறது.
தனக்கு சமமாக இருப்பவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். வெற்றியோ, ஆடம்பரத்தையோ, செல்வாக்கையோ யோசித்து நாங்கள் திருமணம் செய்யவில்லை. அன்பு மட்டும் தான் எங்களுடைய உறவிற்கு அடையாளம். என்னை விட லேட்டாக தான் விக்கி இந்த கேரியரை தொடங்கினார். அதனால் தான் அவரைப் பற்றி நிறைய ட்ரோல்கள் வருகிறது. நான் ஏற்கனவே சக்ஸஸ்ஃபுல் ஆக இருப்பதால் என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவதில் நியாயமே கிடையாது. இவ்வாறு நயன்தாரா பேசியுள்ளார்.