பித்ருதோஷம் தீர்க்க உகந்த நாள் இன்று ! : மகா பரணி தர்ப்பணம் கொடுப்பதன் சிறப்புகளும் பலன்களும்

 'மஹா பரணியில் தர்ப்பணம் செய்தால் கயாவில் தர்ப்பணம் செய்த புண்ணியத்தினை பெறலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மஹா பரணி நாளான இன்று பித்ரு வழிபாடு செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.மேலும் சிறப்பு பூஜைகள்,பிதுர் தர்ப்பணம், திலக்ஹோமம்,மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபாடு செய்வது சகல நண்மைகளையும் வழங்கும் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் நாள் மகா பரணி என்றழைக்கப்படுகிறது .இந்த பரணி நட்சத்திரம் யம தர்மராஜன் ஆட்சி செய்யும் நட்சத்திரம்.எனவே இந்த நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. மகாளய பட்சமான 15 தினங்களும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் இந்நாளில் தர்ப்பணம் செய்வதால்,கயாவில் தர்ப்பணம் செய்த புண்ணியத்தினை அடைவர் என்று நூல்கள் உரைக்கின்றன.

மஹாளய பட்சம் என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை ஜீவராசிகளுக்கும்,நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன. ஆகவே அந்த மஹாளய பட்ச காலத்தில் அவசியம் பித்ரு தேவதைகளுக்க தர்ப்பணம்,ஹிரண்ய சிரார்த்தம், அன்ன சிரார்த்தம் இம் மூன்றில்  எதையேனும் ஒன்றை விடாமல் செய்ய வேண்டும்.'

மகா பரணி நாளில், நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தாலும் பூஜைகளாலும் ஆராதனைகளாலும் பிரார்த்தனைகளாலும் நமக்கு இதுவரை இருந்த பித்ரு தோஷம் முதலானவை அனைத்தும் நீங்கிவிடும் என்பது உறுதி., மகாபரணி நாளில், யாருக்கேனும் வேஷ்டி அல்லது புடவை வழங்குங்கள். செருப்பு, குடை வாங்கிக் கொடுங்கள். வயதானவர்களுக்கு போர்வை வழங்குங்கள். ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தேன்,நெய், தயிர், குடை, செருப்பு, பால், அரிசி முதலானவையும் தானமாக வழங்கலாம்.

   

Related Stories: