தனியார் விமானத்தின் கண்ணாடியில் விரிசல்: அவசர தரையிறக்கம்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து சென்ற கோ பர்ஸ்ட் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து லே நோக்கி சென்றபோது 2வது இன்ஜினில் கோளாறு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் டெல்லி திருப்பி விடப்பட்டது. இதேபோல், ஸ்ரீநகரில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தின் 2வது இன்ஜினிலும் நடுவானில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ஸ்ரீநகர் திரும்பியது. இது தொடர்பாக விசாரணைக்கு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோ பர்ஸ்ட் விமானம் நேற்றும் சர்ச்சையில் சிக்கியது. கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று டெல்லியில் இருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நோக்கி சென்றது. நடுவானில் விமானம் சென்றபோது விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விமானம் கவுகாத்திக்கு செல்லாமல் ஜெய்ப்பூர் திருப்பி விடப்பட்டது. பின்னர், அங்குள்ள விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் கோ பர்ஸ்ட் நிறுவனம் மூன்றாவது தொழில்நுட்ப பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. …

The post தனியார் விமானத்தின் கண்ணாடியில் விரிசல்: அவசர தரையிறக்கம் appeared first on Dinakaran.

Related Stories: