காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. கோயில் வளாகத்தில் இருந்து பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா வந்தார். சுவாமி வீதியுலாவை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.  துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுவாமி வீதியுலா வந்தபோது பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வீட்டு மாடிகளில் இருந்து மாங்கனிகளை இறைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையார், பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து சென்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு சித்தி விநாயகர் கோயிலில் பரமத்தத்தருக்கு இரண்டாம் திருமண நிகழ்ச்சி, 11 மணிக்கு புனிதவதியார் புஷ்ப பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. …

The post காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: