சென்னை: 3எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சிவா தயாரித்து எழுதி இயக்கியுள்ள ‘ஆலன்’ படத்தின் ஆடியோவை கே.பாக்யராஜ் வெளியிட்டார். டி.சிவா பெற்றுக்கொண்டார். இதில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், கேபிள் சங்கர் நடித்துள்ளனர். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் கிருஷ்ணா இசை அமைக்க, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார்.
கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வழங்குகிறார். படம் குறித்து வெற்றி பேசியதாவது: சிவா கொடுத்த கதையைப் படித்தேன். மிகப் பிரமாண்ட மாக உருவாக்க வேண்டும், இசை அமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என்று சொன்னது நடந்தது.
எழுதினால் யாருக்குப் பயன்? எழுத்தினால் உலகத்துக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது பற்றி பேசுகிறோம். நான் எழுத்தாளர் வேடத்தில் தோன்றி, வன்முறைகளைக் கடந்து செல்கிறேன். அன்பை, இயற்கையை, காதலைக் கொண்டாடுங்கள். இந்த உலகம் அமைதியாக வாழும் என்பது படம் சொல்லும் மெசேஜ். ஜெர்மனி, காசி, ரிஷிகேஷ், காரைக்குடி, கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்துமுடிந்துள்ளது.
The post வன்முறையை விரும்பாத எழுத்தாளராக நடிக்கிறேன்: வெற்றி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.