சென்னை: நடிகர் அஜித் குமார் பைக் ரேஸ் சென்றபோது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, தற்போது இணையதளங்கில் வைரலாகி வருகிறது. அதில், ‘மதமும், சாதியும் வெறுப்பை உண்டாக்கும். பயணமே அன்பை விதைக்கும்’ என்று பேசியிருக்கிறார். அந்த வீடியோ பல்வேறு இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் அதிகமாகப் பயணம் செய்யுங்கள் என்பதுதான் என்னுடைய அட்வைஸ். பயணத்தை விட சிறந்த கல்வி இருக்கவே முடியாது. மதமானது நாம் இதற்கு முன்பு சந்தித்திராத மனிதர்களைக்கூட வெறுக்கச் செய்யும் என்று ஒரு கூற்று உண்டு.
மதம் என்றில்லை. சாதியும் அப்படித்தான். அந்தக் கூற்று ரொம்பவே உண்மையானது. சாதி, மதம் போன்றவற்றால் நாம் ஒரு மனிதரைச் சந்திப்பதற்கு முன்பாகவே, அவர் இப்படித்தான் என்று ஒரு தீர்ப்பை எழுதிவிடுகிறோம். ஆனால், நீங்கள் பயணங்களை மேற்கொண்டு வெவ்வேறு தேசங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்களுடன் பழகி, அவர்களின் கலாசாரத்தை அனுபவிக்கும்போது, அது உங்களைக் கனிவானவாக மாற்றும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் மீதும் அதிகமான அன்பைப் பொழியச் செய்யும். பயணங்கள் உங்களை மென்மேலும் சிறந்த மனிதனாக மாற்றும்.
The post அஜித் பரபரப்பு பேச்சு; சாதி, மதம் வெறுப்பை ஏற்படுத்தும் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.