சென்னை: ‘விடா முயற்சி’ படத்தை முடித்துவிட்ட அஜித், அடுத்ததாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சுனில், அர்ஜுன் தாஸ், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார். இந்நிலையில் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே அஜித்துடன் ‘வலிமை’ படத்தில் அவர் நடிக்க இருந்தார். சில காரணங்களால் அதில் அவர் நடிக்க முடியவில்லை. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு ஐரோப்பா நாட்டில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்க இருக்கிறார். அதன் பிறகு சில நாடுகளில் பைக் பயணம் மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
The post அஜித்துடன் இணைந்தார் பிரசன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.