பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி

தா.பழூர்: தா.பழூர் அருகே காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி  நிகழ்ந்தது. இதை திரளான பக்தர்கள் தரிசித்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளிப்படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். தமிழ் மாதத்தில் சித்திரை மாதம் தொடக்கம் என்பதால் இம்மாதத்தில் சூரியபகவான் ஈசனை வழிபடுவதாக ஐதீகம்.

அதன்படி நேற்று காலை சூரிய உதயத்தின்போது அதிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த அரிய காட்சியை கண்ட பக்தர்கள் ஆச்சிரியத்தில் மூழ்கினர். இந்த செய்தியை அறிந்து காரைகுறிச்சி சுற்றி உள்ள  சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து இறைவனை தரிசித்தனர். இந்தநிகழ்வு சித்திரை 10ம் தேதி வரை நீடிக்கும் என்று கோவில் வழிப்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

அப்போது பக்தர்கள் தெரிவிக்கையில், லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வகாட்சி சூரிய உதயத்திற்கு முன்னதாக கோயிலுக்கு வந்து சூரிய ஒளியோடு இறைவனை தரிசிப்பது அபூர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: