சென்னை: தமிழ் திரையுலகின் முதல் திருநங்கை இயக்குனர் என்று சொல்லப்படும் சம்யுக்தா விஜயன் இயக்கியுள்ள படம், ‘நீல நிறச் சூரியன்’. வரும் 4ம் தேதி தமிழகமெங்கும் எக்ஸ்போரியா ஹைஜின் நிறுவனம் வெளியிடுகிறது. உலகம் முழுக்க பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகள் பெற்றுள்ள இப்படத்தில் சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் நடிக்கின்றனர். ஸ்டீவ் பெஞ்சமின் ஒளிப்பதிவு செய்து, இசை அமைத்து எடிட்டிங் செய்துள்ளார். பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் சார்பில் மாலா மணியன் தயாரித்து உள்ளார். படம் குறித்து சம்யுக்தா விஜயன் கூறுகையில், ‘பெண்ணாக மாற விரும்பும் ஒரு ஆணைப் பற்றியும், நமது சமூகம் அவரை எப்படிப் பார்க்கிறது? எப்படி அதை கடந்து தனது வாழ்க்கையில் சாதிக்கிறார் என்பதை யும், நாடகத்தன்மையின்றி சொல்லும் படம் இது’ என்றார்.
The post தமிழ் திரையுலகின் முதல் திருநங்கை இயக்குனர்: சம்யுக்தா விஜயன் இயக்கி நடிக்கும் ‘நீல நிறச் சூரியன்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.