செண்பகராமன்புதூர் பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா

நாகர்கோவில்: செண்பகராமன்புதூர் பத்ரகாளி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 15ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று காலையில் தீர்த்தாபிஷேகம், பால்குட ஊர்வலம் மற்றும் நேர்ச்சைகள் எடுத்து வருதல், மதியம் உச்சிகால வழிபாடு, தொடர்ந்து அன்னதானம், மாலையில் கும்பாபிஷேக தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், நள்ளிரவில் பத்தரகாளி அம்மனுக்கு காளி ஊட்டு, அலங்கார தீபாராதனை, பத்ரகாளி அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்று காலை 5 மணிக்கு பத்ரகாளி அம்மன் சிங்க வாகனத்தில் கோயில் வந்தடைதல், 5.30 மணிக்கு வாண வேடிக்கை, மதியம் 12 மணிக்கு நையாண்டி மேளம், 1 மணிக்கு உச்சிகால வழிபாடு, பூப்படைப்பு, 2 மணிக்கு மஞ்சள் நீராடல்,  மாலை 4 மணிக்கு வீதிஉலா, 6 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு செம்மலர் வழிபாடு, மஞ்சள்காப்பு ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் சுப்பிரமணியன், தலைவர் ரமேஷ்கண்ணன், செயலாளர் மனோகரன், பொருளாளர் பாபு ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Related Stories: