கஞ்சா விற்ற 117 பேர் கைது: காஞ்சிபுரம் எஸ்பி தகவல்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 44.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர்  நிருபர்களை சந்தித்து கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 117 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 44.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது 103 வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் தீமை குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இளம் சமூகத்தின் கனவு, லட்சியங்களை சீரழிக்கும் போதை பொருள் விற்பனையை தடுத்து நிறுத்திய எஸ்பி சுதாகருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்….

The post கஞ்சா விற்ற 117 பேர் கைது: காஞ்சிபுரம் எஸ்பி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: