பீல்டர்களுக்கு உரிய கவுரவம் அளிக்கப்படுவதில்லை: டிவில்லியர்ஸ் வருத்தம்

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும் சிறந்த பீல்டர்களில் ஒருவருமான டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- டெஸ்ட் கிரிக்கெட் அல்லது எந்த ஒரு கிரிக்கெட்டிலும் பீல்டர்கள் மணிக்கணக்கில் பீல்டிங்கில் வெயிலில் காய்கின்றனர். அதற்கான பெருமை அவர்களுக்கு கிடைப்பதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்சிங்கிற்கு அதிக முக்கியத்துவம், அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. இதுதான் 250 ரன்னில் ஆல் அவுட் ஆவதற்கும் 400 ரன்களுக்கு மேல் எடுப்பதற்கும் உள்ள வித்தியாசம். சுமார் 6, 7 மணி நேரத்திற்கும் மேல் கொளுத்தும் வெயிலில் இடைவிடாத கவனத்துடன் இருக்கும் பீல்டர்களுக்கு உரிய பாராட்டு கிடைப்பதில்லை. அதாவது கண்சிமிட்டும் நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் கேட்சையும் அவர் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் `குட் கேட்ச்’ என்று முதுகில் தட்டிக்கொடுப்பதோடு சரி, அவ்வளவுதான். ஒரு மேட்சை மாற்றும் கேட்சுக்கு அதிகபட்சமாக கிடைக்கும் மரியாதை அதுதான். ஆனால் கேட்சை விட்டுவிட்டால் சகவீரர்களின் கொடூரமான மவுனம், ரசிகர்களின் கேலி மிகமிக தர்மசங்கடமானது. பீல்டிங் வேலை மன்னிப்பேயில்லாத பணியாகும். அதில் நிறைய அழுத்தங்கள் உண்டு… ஆனால் பரிசுகள் இல்லை. வாரியத்தில் பீல்டர்களுக்கு உரிய கவுரவம் அளிக்கப்படுவதுமில்லை….

The post பீல்டர்களுக்கு உரிய கவுரவம் அளிக்கப்படுவதில்லை: டிவில்லியர்ஸ் வருத்தம் appeared first on Dinakaran.

Related Stories: