சவரத் தொழிலாளர் சங்க ஆண்டு விழா அமைப்புசாரா தொழிலாளருக்கு வீடுகள் கட்டி தர வேண்டும்: கூட்டத்தில் தீர்மானம்

செய்யூர்:செய்யூர் அருகே தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் 15ம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பவுஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் ருக்மாங்கதன் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொருளாளர் ராஜீவ்காந்தி வரவேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில தலைவர் முனுசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து, பவுஞ்சூர் மற்றும் திருவாதூர் ஊராட்சிகளில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வீடு கட்டி தருவதுபோல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடிதிருத்தும் தொழிலாளர்கள் நீண்டநாள் கோரிக்கையான 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவர் நாவிதர் சமுதாயத்திற்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

The post சவரத் தொழிலாளர் சங்க ஆண்டு விழா அமைப்புசாரா தொழிலாளருக்கு வீடுகள் கட்டி தர வேண்டும்: கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: