புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை தலைவராக விஷ்ணு மன்ச்சு தொடர்வார்: ‘மா’ பொதுக்குழு ஒப்புதல்

ஐதராபாத்: தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கமான MAA என்கிற ‘மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (மா) பொதுக்குழு கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில், தற்போதைய தலைவர் விஷ்ணு மன்ச்சுவின் மேற்பார்வையில், மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்ஸ் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை, தற்போதைய தலைமையே தொடர்ந்து பணியாற்றும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

சுமார் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், வரும் மே மாதம் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல், வரும் ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்ச்சி, மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்ஸ் புதிய கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானப் பணி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில், தலைவர் விஷ்ணு மன்ச்சு தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தை, மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்ஸ் கட்டிடத்தை வெற்றிகரமாக கட்டி முடிக்கும் வரை நீட்டிக்க முன்மொழியப்பட்டது.

The post புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை தலைவராக விஷ்ணு மன்ச்சு தொடர்வார்: ‘மா’ பொதுக்குழு ஒப்புதல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: