டிரைவரை அடித்து உதைத்து பணம் பறித்த 2 பேர் கைது

புழல்: டிரைவரை அடித்துஉதைத்து பணம் பறித்த இரண்டு பேரை கைது செய்தனர். சென்னை சோழவரம் அருகே நெற்குன்றம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (32). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்றிரவு சோழவரம் செங்காளம்மன் கோயில் அருகே வந்தபோது பைக்கில் வந்த இரண்டு பேர், அவரது ஆட்டோ மீது மோதியதுடன் குறுக்கே பைக்கை நிறுத்தி மறித்துள்ளனர். பின்னர் கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்படி, சோழவரம் போலீசார் சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சியை வைத்து சோழவரம் பெரிய காலனியை சேர்ந்த அஜித்குமார் (25), டில்லிபாபு (22) ஆகியோரை கைது செய்தனர். இதுபோல் வேறிடத்தில் கைவரிசை காட்டியுள்ளார்களா என்று விசாரிக்கின்றனர்.   …

The post டிரைவரை அடித்து உதைத்து பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: