பெண் பாதுகாப்பை மையப்படுத்திய படம்

 

சென்னை: சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்திய படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’. யோக்கியன் படத்தை இயக்கிய இயக்குநர் சாய் பிரபா மீனா இப்படத்தை இயக்கி இருப்பதோடு இப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். நடிகர்கள் ராஜ் மித்ரன், மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ் ஆகியோருடன் நடிகை ஷகீலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராம்குண்டலா ஆஷா தயாரித்துள்ளார்.

இயக்குநர் சாய் பிரபா மீனா கூறும்போது, ‘வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்ட பெண்கள் இந்த தலைமுறையில் தான் கல்வியில் முன்னேறி, வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். பல துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் சில மனித மிருகங்கள் பெண்களை வெறும் போகப்பொருளாகவே பார்க்கின்றனர். அது போல நான்கு இளம்பெண்களும் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் அதற்கு எதிராக அவர்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதையும் தான் இப்படம் பேசுகிறது’ என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

The post பெண் பாதுகாப்பை மையப்படுத்திய படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: