புறா பந்தயத்துடன் உருவான பைரி 1

சென்னை: முழுநீள புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், ‘பைரி 1’. டி.கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.துரைராஜ் தயாரித்துள்ளார். சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி நடித்துள்ளனர். ஏ.வி.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ‘தடம்’ அருண் ராஜ் இசை அமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா, மோகன் ராஜன், பொன் மனோபன் பாடல்கள் எழுதியுள்ளனர். ஜான் கிளாடி எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

‘பைரி’ என்பது ஃபால்கன் என்ற பருந்தின் பெயர். இக்கதைக்கு அப்பெயர் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்தோம். பந்தயத்துக்காக புறா வளப்பவர்களின் மிகப்பெரிய எதிரி, பைரி. ஒருவர் 30 புறாக்கள் வளர்த்தால், பந்தயத்துக்கு 3 புறாக்கள் மட்டுமே தேறும். புறாக்களை பைரி தூக்கிக்கொண்டு செல்வது வழக்கம். அதுபோல், மனிதர்களின் வாழ்க்கையிலும் உயரத்தில் இருப்பவர்களைக் கடந்து சிலபேர் மட்டுமே சாதிக்க முடிகிறது.

இதை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. புறா பந்தயம் பற்றி மட்டுமின்றி, ஒரு தாய், மகனுக்கு இடையிலுள்ள பாசத்தைப் பற்றியும் படம் பேசுகிறது. வரும் பிப்ரவரி மாதம் சக்தி பிலிம் பேக்டரி படத்தை திரைக்கு கொண்டு வருகிறது. சமீபத்தில் டீசரை விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டனர்.

The post புறா பந்தயத்துடன் உருவான பைரி 1 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: