சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படம் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் படத்தை வெளியிட கோர்ட் தடை விதித்துள்ளது. 13 கோடி ரூபாய் பண விவகாரம் என்பதால் தடை நீங்கி படம் வெளிவருமா என்று தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிக்கும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். இதற்காக உடல் எடையை கூட்டி நடித்தார். இது தொடர்பான காட்சிகள் காஷ்மீரில் படமானது. தற்போது இந்த படத்திற்காக உடல் எடையை கணிசமாக குறைத்து பள்ளி மாணவன் தோற்றத்திற்கு மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான படத்தை வெளியிட்டுள்ள அவர் ‘‘இந்த லுக் 21வது படத்திற்கு” என்று குறிப்பிட்டுள்ளார். படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் பள்ளி மாணவனாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கும் என்று தெரிகிறது.
The post உடல் எடை குறைத்த சிவகார்த்திகேயன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.