டாக்டர் மகன் டாக்டராகலாம் நடிகர் மகன் நடிக்கக் கூடாதா: கேட்கிறார் விஜய் சேதுபதி மகன்

சென்னை: பீனிக்ஸ் என்ற படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பூஜைக்கு விஜய் சேதுபதி ஏன் வரவில்லை என்று அப்போது கேட்டதற்கு, ‘நான் வேற அப்பா வேற. அதனால்தான் சூர்யா சேதுபதினு போடாம சூர்யானு’ போட்ருக்காங்க என்றார். அந்தப் பேச்சை பார்த்த பலரும் வயதுக்கு மீறிய பேச்சு என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் டீசர் வெளியீட்டு விழாவுக்கு விஜய் சேதுபதி வந்திருந்தார். அப்போது ஏன் அப்பாவை அழைத்து வந்தீர்கள் என்று சூர்யாவிடம் கேட்டதற்கு, தந்தையர் தினத்துக்காக அழைத்து வந்தேன் என்று கூறி சமாளித்தார்.

இந்நிலையில் மீண்டும் ட்ரோல்களை சந்திக்க ஆரம்பித்திருக்கிறார் சூர்யா சேதுபதி. அதாவது சமீபத்தில் பேசிய அவர், ‘டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். நடிகரின் மகன் மட்டும் நடிகராகக்கூடாதா’ என்று கேள்வி எழுப்பினார். அதனை கவனித்த நெட்டிசன்ஸோ, ‘என்ன நெப்போட்டிசத்துக்கு ஏகத்துக்கும் சப்போர்ட் செய்கிறாரே சூர்யா. இப்போதெல்லாம் டாக்டர் மகன் டாக்டர் ஆவதற்குக்கூட ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் நடிகர் மகன் நடிகர் ஆவதுதான் ஈஸி. அதை புரிந்துகொள்ளாமல் இஷ்டத்துக்கு பேசுகிறாரே’ என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Related Stories: