துபாயில் கார் ரேஸ் சோதனை ஓட்டம்: தமிழக விளையாட்டுத்துறை சின்னத்தை பயன்படுத்திய அஜித்

துபாய்: துபாயில் உள்ள ஆட்டோட்ரோம் ரேஸ் ட்ராக்கில் நடிகர் அஜித் porsche gt3 cup car என்ற காரை டெஸ்ட் ட்ரைவ் (சோதனை ஓட்டம்) செய்துள்ளார். போர்ஸ்சே ஜிடி3 கப் கார் ஒரு பிரத்யேக ரேஸ் காராகும். டவுன்ஃபோர்ஸ் மற்றும் ஹேண்டலிங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது. இந்த கார் ரேஸ்ட்ராக்கில் சிறப்பாக செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்டது.

மணிக்கு 300 முதல் 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. காரின் திறனை புரிந்துகொண்டு ரேஸிங் டெக்னிக்குகளை உருவாக்க ரேசர்கள் இவ்வாறு சோதனை ஓட்டம் செய்வது குறிப்பிடத்தக்கது. இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும்.
துபாயின் ஆட்டோட்ரோம் (Autodrome) ரேஸிங் சர்க்யூட் உலகப் பிரசித்தி பெற்றது.

இதில் அதிவேகமாக பயணிக்க முடிவதுடன், தனித்துவமான சவால்களும் உள்ளது. பல சர்வதேச போட்டிகள் இங்கு நடைபெறுவதுண்டு. இந்த காரை அஜித் 350 கிமீ வேகத்தில் பறந்து டெஸ்ட் டிரைவ் செய்தார். அப்போது அவர் தனது காரிலும் தனது விளையாட்டு உபகரணங்களிலும் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சின்னத்தை பயன்படுத்தியுள்ளார். இதை ரசிகர்களும் நெட்டிசன்களும் பாராட்டி வருகிறார்கள்.

Related Stories: