2016ல் நடந்த விமான விபத்தின் போது 66 பேர் சாவுக்கு காரணம் விமானி சிகரெட் பிடித்ததுதான்: பிரான்ஸ் நிபுணர்கள் அறிக்கை வெளியீடு

கெய்ரோ: கடந்த 2016ம் ஆண்டு பாரிஸில் இருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற எகிப்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். கிரீஸ் அருகே கடலில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடந்த போது, ​​தீவிரவாத தாக்குதலால் விபத்து ஏற்பட்டதாக எகிப்து அதிகாரிகள் கூறினர். விமானம் விபத்துக்குள்ளாகி சுமார் 6 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘எகிப்து விமானத்தின் விமானி சிகரெட் பிடித்ததால் விபத்து ஏற்பட்டது. விமானிகளுக்கான அறையில் இருந்த இந்த விமானத்தின் விமானி ஒருவர், சிகரெட் பற்றவைப்பதற்காக லைட்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்த அவசர முகக் கவசத்தில் இருந்து ஆக்ஸிஜன் கசிந்தது. இதனால் ஏற்பட்ட தீப் பொறியானது, விமானியின் அறையில் பரவியது. அதன்பின் விமானத்திலும் பரவியதால் கோரமான விபத்து ஏற்பட்டது. அதன் பின் அந்த விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்தது. அதில் இருந்த 66 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், 40 எகிப்தியர்களும், 15 பிரான்ஸ் குடிமக்களும் உயிரிழந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post 2016ல் நடந்த விமான விபத்தின் போது 66 பேர் சாவுக்கு காரணம் விமானி சிகரெட் பிடித்ததுதான்: பிரான்ஸ் நிபுணர்கள் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: