புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 7-வது முறையாக விண்வெளி பயணம்: விண்வெளி சுற்றுலா சென்ற முதல் இந்தியர் ஆனார் ஆந்திர விமானி

டெக்சாஸ்: ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் விண்வெளி சுற்றுலாவில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளனர். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் ப்ளூ ஆர்ஜின், எலான்மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ரிச்சர்ட் பிரான்ஸின் வர்ஜின் காலட்ரிக் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ஜெஃப் பெசோசின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 7வது முறையாக 6 பேர் கொண்ட குழு நேற்று மாலை விண்வெளிக்கு பயணம் செய்தனர். விண்வெளி சுற்றுலா மூலம் ஆந்திராவை சேர்ந்த 30 வயதான விமானி கோபிசந்த் தோட்டகுறா விண்வெளிக்கு சென்றுள்ளார். இந்த குழுவில் அமெரிக்காவின் முதல் கறுப்பின விண்வெளிவீரரான முன்னாள் விமானப்படை கேப்டன் எட்டோவைடல் இடம்பிடித்துள்ளார்.

மேற்கு டெக்ஸாஸில் உள்ள வான் ஹாங் ஏவுதளத்தில் இருந்து நியூ ஷாப்பஹார்ட் என்ற ராக்கெட்டில் இவர்கள் புறப்பட்டனர். பூமியிலிருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர். கார்மன்கோடு அருகே ஈர்ப்புவிசையை இழந்து வீரர்கள் சிறிது நேரம் விண்ணில் மிதந்து மகிழ்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து வீரர்கள் சென்ற கேப்சுல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் சுற்றுலா பயணம் மகிழ்ச்சியாக இருந்ததாக விண்ணில் பயணம் செய்து திரும்பிய ஆந்திராவை சேர்ந்த கோபிசந்த் தோட்டக்குறா தெரிவித்துள்ளார்.

The post புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 7-வது முறையாக விண்வெளி பயணம்: விண்வெளி சுற்றுலா சென்ற முதல் இந்தியர் ஆனார் ஆந்திர விமானி appeared first on Dinakaran.

Related Stories: