தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜ திட்டம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

சீர்காழி: தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜ திட்டமிடுவதாக திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சீர்காழியில் நேற்று அளித்த பேட்டி: தமிழக ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது திசை திருப்பும் முயற்சி. பாஜவை சார்ந்தவர்கள் திட்டமிட்டு தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். வன்முறையை தூண்ட திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்….

The post தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜ திட்டம்: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: