தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: அரையிறுதியில் தமிழ்நாடு

போபால்: தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதியில் விளையாட தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்கண்ட், அரியானா ஆகிய மாநிலங்கள் தகுதிப் பெற்றுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் போபாலில்  12வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் பேட்டி நடக்கிறது. இப்போட்டியில் புதுச்சேரி, ஆந்திரா, ஒடிஷா, பஞ்சாப் உட்பட 38 அணிகள் பங்கேற்றன.  இதில்  ஜி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு லீக் சுற்றில்  மத்திய பிரதேசத்தை 4-0, மணிப்பூரை 5-0,  இமாச்சல் பிரதேசத்தை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜி பிரிவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு கடைசி காலிறுதியில்,  பி பிரிவில் முதலிடம் பிடித்த    உத்ரபிரதேச அணியுடன்  நேற்று முன்தினம் மோதியது.  அதில் தமிழ்நாடு 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. தமிழக அணியின் ஜோஸ்வா பென்டிக்ட், ஜீவாகுமார், சுந்தரபாண்டி ஆகியோர் தலா ஒரு கோல்  அடித்தனர்.அதேபோல் மற்ற காலிறுதி ஆட்டங்களில் கர்நாடகா 4-3 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்காளத்தையும்,  மகாராஷ்டிரா 2-1(பெனால்டி ஷூட் அவுட்) என்ற கோல் கணக்கில்  ஜார்கண்டையும்,  அரியானா 3-0 என்ற கோல் கணக்கில் டெல்லியையும் வீழ்த்தின. போட்டியில் நேற்று ஓய்வு நாள். இன்று  நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய அணிகள் களம் காண உள்ளன.  இறுதி, 3வது இடத்துக்கான ஆட்டம் நாளை நடக்கும்….

The post தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: அரையிறுதியில் தமிழ்நாடு appeared first on Dinakaran.

Related Stories: