தெலுங்கு நடிகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி

 

ஐதராபாத்: ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனத்துக்காக பிரபாகர் ஆரிபாகா வழங்க, பிருத்வி போலவரபு தயாரிப்பில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கும் படத்தின் தொடக்க விழா ஐதரபாத்தில் நடந்தது. சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘விமானம்’ படத்தின் இயக்குனர் சிவபிரசாத் யானாலா கதை எழுதியுள்ளார். துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்ய, அருண் சிலுவேரு இசை அமைக்கிறார். மாலி வசனம் எழுதுகிறார். தந்தை, மகன் பாசம் மற்றும் ேமாதல் பற்றி சொல்லும் இப்படத்தின் ஷூட்டிங், வரும் நவம்பர் 9ம் தேதி முதல் ஐதராபாத், சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

The post தெலுங்கு நடிகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: