ஸ்விட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை: ஸ்விட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஸ்விஸ் ஓபன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். ஸ்விஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி .சிந்து, தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் துவக்கத்தில் சிந்து 3 -0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தார். இதையடுத்து அதிரடியாக ஆடிய புசானன் ஓங்பாம்ருங்பானை அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் 7-7 என முன்னிலை பெற்றார். இருப்பினும் சிந்து தனது அசாத்திய ஆட்டத்தினால் முதல் சுற்றில் 21-16 என்ற புள்ளிகளுடன் சுற்றை தன் வசம் ஆக்கினார். 2-வது சுற்றில் 21-8 என்ற செட்டையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் 2019 இல் முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவர் தற்போது இரண்டாவது சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது . ஸ்விஸ் ஓபன் தொடரில்  சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்துவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு;  தனது ஆதிக்கமிகுந்த அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி. சிந்து மீண்டும் ஒரு முறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்துவிசையாக விளங்க எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்….

The post ஸ்விட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.! appeared first on Dinakaran.

Related Stories: