என்னுடன் இருக்கும் யாரையும் இழக்க விரும்பவில்லை கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக கட்சிப்பணி செய்தது துரை வைகோதான்: பொதுக்குழுவில் வைகோ பேச்சு

சென்னை: மதிமுக  28வது பொதுக்குழு கூட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. இதில்  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா,  தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட  கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: சில நாட்களாக கட்சியில் நீர்க்குமிழி போல சில  காட்சிகள்  தென்பட்டது, என் இதயத்தை காயப்படுத்தி ரத்தம் கொட்ட வைத்து பலர்  வெளியேறியிருக்கலாம், ஆனாலும் என்னுடன்  இருக்கும் யாரையும் நான் இழக்க விரும்பவில்லை. கட்சியின் கூட்டங்களுக்கு கடந்த ஓராண்டாக  வராத சிலர், தனியாக ஒரு கூட்டம் நடத்தி பொதுக்குழுவிற்கு செல்லக்கூடாது என முடிவு செய்திருந்தனர். அவர்கள் கடந்த தேர்தலில்  அதிமுகவுடன்  கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறியவர்கள்.   கட்சி முடிவுக்கு கட்டுப்படாமல் 5 மாவட்ட செயலாளர்கள் சிவகங்கையில் தனியாக கூட்டம் நடத்தியுள்ளனர். 5 பேரையும் தயவு தாட்சண்யம் பார்த்து கட்சியை விட்டு நீக்காமல் இருந்தேன். சிவகங்கை மாவட்ட செயலாளரை நேரில் அழைத்து பேசினேன். அவரது மனக்குறையை போக்க முயற்சித்தேன். நான் சொல்லியதை கேட்காமல் தவறான கருத்துகளை பேசி வந்தார்கள். அவைத்தலைவர் துரைசாமி வராததன் காரணம் தெரியவில்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர்  அதிமுகவுடன் கூட்டணி வைப்பதுதான் நல்லது என கூறியிருந்தார். அவரது  கருத்துக்கு கட்சியிலேயே எதிர்ப்பு இருந்தது. திருப்பூர் துரைசாமி தனி மரமாகிவிட்டார். திருப்பூரிலேயே அவருக்கு ஆதரவு கிடையாது. பொதுச் செயலாளர் இல்லாவிட்டால்தான் அவைத்தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படும். மதிமுகவில்  அனைத்து அதிகாரமும் பொதுச்செயலாளரிடம்தான் இருக்கிறது. 99.9 சதவீதம் பேர் என்னுடன்தான் இருக்கின்றனர். பொதுக்குழு அறிவிப்பு வெளியிட்டதே நான்தான். கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டுகளாக கட்சிப் பணி செய்தது துரை வைகோதான். கட்சியில்  குழப்பம் செய்ய நினைத்த 5 பேரும் ஏமாந்தனர். சிவகங்கையில் அவர்களை  200 தொண்டர்கள் சுற்றி வளைத்தனர். நான் அவர்களை எதுவும் செய்து விட வேண்டாம், பேசுவதை பேசட்டும் என்று கூறினேன்.  காவல்துறை பாதுகாப்பில் அவர்கள்  தப்பினர். இவ்வாறு பேசினார்.  திமுக அரசு, மக்களுக்கு  அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக்காடு, கடந்த பத்து மாத காலத்தில்  நிறைவேற்றி இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 24 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன….

The post என்னுடன் இருக்கும் யாரையும் இழக்க விரும்பவில்லை கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக கட்சிப்பணி செய்தது துரை வைகோதான்: பொதுக்குழுவில் வைகோ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: