மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ஹர்பஜன் சிங்… ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் காலியாக உள்ள 1 இடத்திற்கான தேர்தல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் விவரம் வெளியாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, தனியார் பல்கலைக்கழக வேந்தர் அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளனர். இதற்கான வேட்பு மனுவை இவர்கள் இன்று தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். …

The post மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ஹர்பஜன் சிங்… ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: