வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு பணிகள் துவக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

சிவகாசி: வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழடி, கொந்தகை, அகரம், வெம்பக்கேட்டை மேட்டுகாடு (விஜயகரிசல்குளம் வருவாய் கிராம பகுதி) போன்ற இடங்களில் அகழாய்வு ெசய்ய உத்தரவிட்டார். இதன்படி நேற்று மாலை விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை மேட்டுகாடு பகுதிதியில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். முதல்கட்டமாக வட்டக்கல், சங்கு வளையல்கள் கிடைத்துள்ளன. நிகழ்ச்சியில் சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன், கலெக்டர் மேகநாத ரெட்டி, தொல்லியல்துறை ஆணையாளர் சிவானந்தம், அகழாய்வு துறை இயக்குனர் பாஸ்கர், சிவகாசி சப் கலெக்டர் பிரித்விராஜ், சாத்தூர் வருவாய் ேகாட்டாட்சியர் புஷ்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு தான், அகழாய்வு ஆராய்ச்சி பணிக்கான பொற்காலமாக தமிழகம் திகழ்கிறது. அகழாய்வு பணிக்காக முதல்வர் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்று கரையோரத்தில் உள்ள மேட்டுக்காடு, உச்சிமேடு பகுதியில் அகழாய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வைப்பாற்று கரையோரம் நுண்கற்காலம் தொடங்கி வரலாற்றின் தொடக்க காலம் வரையில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. வைப்பாற்று கரையோர மக்களின் நாகரீகம் அறிந்து கொள்வதற்கான இடமாக வெம்பக்கோட்டை மேட்டுக்காடு பகுதி நிலவி வருகிறது. இங்கு சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், தக்களி, வட்டக்கல்கள் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படுகிறது. தொடர்ந்து இங்கு அகழாய்வு பணிகள் மேற்கொண்டால், இந்தப் பகுதி எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு அடையாளமாக இருக்கிறது என்பது தெரிய வரும்’’ என்றார்….

The post வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு பணிகள் துவக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: