பட்டாசு ஆலையில் வெடி விபத்து தொழிலாளி பலி

கெங்கவல்லி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கடம்பூர் மேற்கு காடு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன்(39). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாய தோட்டத்தில், 4 கட்டிடங்கள் தனித்தனியே கட்டி சிறிய அளவில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு நேற்று கூலமேடு பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (45), கடம்பூர் பகுதியைச் சேர்ந்த சத்யா (34), விஜயா (40), அங்கம்மாள் (45), சித்ரா (38) உள்ளிட்ட பெண்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்துள்ளனர்.

மாலை 4 மணியளவில், மூலப்பொருட்களை எடுப்பதற்காக ராஜமாணிக்கம் ஒரு கட்டிடத்திற்குள் சென்றபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் தரைமட்டமானது. இதில் ராஜமாணிக்கம் 200 மீட்டர் தாண்டி 3 துண்டுகளாக உடல் சிதறி விழுந்து உயிரிழந்தார்.

சத்யா, விஜயா, அங்கம்மாள், சித்ரா ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். ராஜமாணிக்கம் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் ஏற்றியபோது, உறவினர்கள், ஆம்புலன்சை வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர். ஆலை உரிமையாளர் தனசேகர், தொழிற்சாலை அனுமதி பெறுவதற்கு நவம்பர் மாதம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை அவருக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

The post பட்டாசு ஆலையில் வெடி விபத்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: