மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்! என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் முதல் நேபாளம் வரை கல்லூரி மாணவர் நடைபயணம்: 9 மாநிலங்கள் செல்ல திட்டம்

திருவள்ளூர்: ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் மரம் வளர்ப்போம், பறவைகளை காப்போம் என்பதை வழியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை செல்ல திட்டம்மிட்டு நடைபயணமாக தொடங்கி உள்ளார். சுற்றுச்சூழலை பசுமையாக்கி பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் வலியுறுத்தி பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் நகராட்சி, எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்(22). இவர் சென்னை, வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், இந்த மாணவர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதை மையமாக வைத்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது, மரம் வளர்ப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரையில் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டார். அதன்பேரில் திருவள்ளூர் காமராஜர் சிலை முன்பு நடைபயணத்தை தொடங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தன்னார்வலர் முருகன் ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தனர். இவர் திருவள்ளூரில் நடைபயணத்தை தொடங்கி, ஹதாரபாத், தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், வாரணாசி, நாக்பூர், பீகார் உள்பட 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரையில் செல்லவுள்ளார். பயணத்தை நேபாளத்தில் நிறைவு செய்த பிறகு அங்கிருந்து ரயில் மூலம் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின்போது போக்குவரத்து காவல் துறையினர், தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்! என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் முதல் நேபாளம் வரை கல்லூரி மாணவர் நடைபயணம்: 9 மாநிலங்கள் செல்ல திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: