3.0 ரோபோடிக்ஸ் சேலஞ்சில் பிரத்யூஷா பொறியியல் கல்லூரி முதலிடம்

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த அரண்வாயில் குப்பம், பிரத்யூஷா பொறியியல் கல்லூரி மாணவர்களின் இயந்திரமானவ் அணி பிளிப்கார்ட் நிறுவனம் அகில இந்திய அளவில் நடத்திய  பிளிப்கார்ட் கிரிட் 3.0 ரோபோடிக்ஸ் சேலஞ்ச் என்ற போட்டியில் இறுதி சுற்றில் முதலிடம் பெற்று ரூ.1.50 லட்சம் பரிசுத்தொகை வென்றது. முதலிடம் பெற்ற அணியின் ஆலோசகராக ஆசிரியர் கோபிநாத் நாராயணன் தக்க ஆலோசனைகளை வழங்கி வெற்றி பெற செய்தார். முதல் மற்றும் இரண்டாம் இடத்தை வென்ற அணிகள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நேர்காணல் மூலம், வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு ஆண்டு வருமானம் ரூ.24 லட்சம் வழங்க உள்ளது.  இந்நிலையில் பிரத்யூஷா பொறியியல் கல்லூரியில் வெற்றி பெற்ற பெற்ற மாணவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தது. இதில் பிரத்யூஷா பொறியியல் கல்லூரியின் தலைவர் பி.ராஜாராவ் இறுதி சுற்றில் முதலிடம் பெற்ற இயந்திரமானவ் அணியின் சி.எஸ்.ஆதர்ஷ், வி.அபிநேசன், சாய் தீப்தி, அரவிந்த் சாய், பிரேம்குமார், தமிழ்ச்செல்வன், கண்ணன், சூர்யா கிரிஸ்டிக், ஆகாஷ் பாண்டே, அரவிந்த், வைகுந்த், ஹரிகிருஷ்ணன் ஆகிய மாணவர்களுக்கு ரூ.1.50  லட்சம் பரிசுத்தொகை கொடுத்து கௌரவித்தார். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் துணை தலைவர் சரண் தேஜா, முதல்வர் டாக்டர் பி.ஆர்.ரமேஷ் பாபு, ஆலோசகர் எம்.வாசு, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறைத் தலைவர் கேப்டன் ஆர்.ஜி.தயாகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்….

The post 3.0 ரோபோடிக்ஸ் சேலஞ்சில் பிரத்யூஷா பொறியியல் கல்லூரி முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: