மகளிர் உலக கோப்பை நியூசி.க்கு முதல் வெற்றி: இந்தியா ஏமாற்றம்

ஹாமில்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் ஹாமில்டனில் நடந்த 8வது லீக் ஆட்டத்தில் நேற்று  நியூசிலாந்து-இந்தியா மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா  பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. அமி 75, அமிலியா 50, கேத்தி 41, கேப்டன் ஷோபி 35ரன் எடுத்தனர். மற்றவர்கள் ரன் குவிக்க திணறியதுடன் விக்கெட்டையும் பறிகொடுத்தனர். அதனால் நியூசி 50ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 260ரன் குவித்தது. இந்திய தரப்பில் அசத்தலாக பந்து வீசிய பூஜா 4 விக்கெட் அள்ளியதுடன், கூடுதலாக ஒரு ரன் அவுட் செய்தார். ராஜேஸ்வரி 2 விக்கெட் எடுத்தார்.தொடர்ந்து 261ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷபாலிக்கு பதில் யாஷ்டிகா களம் கண்டார். அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிரிதி 6, தீப்தி 5 ரன்னில் வெளியேறினர். விக்கெட்களை கொஞ்சம் நேரம் பாதுகாத்த கேப்டன் மிதாலி 31, யஷ்டிகா 28 ரன்னில் ஆட்டமிழந்தனர்.  அதன் பிறகு வந்த  ஹர்மன்பிரீத் அதிரடியாக ஆடி அரை சதம் விளாசி  71ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்நேகா, பூஜா உட்பட மற்ற வீராங்கனைகளும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப  இந்தியா 46.4 ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 198ரன் மட்டுமே எடுத்தது. அதனால் நியூசி 62ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை சுவைத்துள்ளது. அந்த அணியின் லி டகுகூ 2மெய்டன் ஓவர் உட்பட 10ஓவர் வீசி 17ரன் மட்டுமே தந்து 3 விக்கெட் கைப்பற்றினார். அமிலியாவும் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக நியூசியின் அமி தேர்வு செய்யப்பட்டார்.* ஜூலன் சாதனைநியூசிக்கு எதிரான கடைசி ஓவரின் முதல் பந்தில் கேத்தியை ஆட்டமிழக்க செய்து, உலக கோப்பையில் தனது 39வது விக்கெட்டை கைப்பற்றினார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி . அதன் மூலம் உலக கோப்பையில்  அதிக விக்கெட் வீழத்திய  ஆஸ்திரேலிய வீராங்கனை லின் ஃபுல்ட்ஸ்டன்(1982-1988)  சாதனையை சமன்  செய்துள்ளார்….

The post மகளிர் உலக கோப்பை நியூசி.க்கு முதல் வெற்றி: இந்தியா ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: