திமுகவிற்கு வாக்களித்ததால் நகர செயலாளர் உட்பட 7 நிர்வாகிகள் நீக்கம்: அதிமுக தலைமை அறிவிப்பு..!!

சென்னை: திமுக நகர்மன்ற தலைவர் பதவி போட்டியில் அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் திமுகவிற்கு வாக்களித்ததால் நகரசெயலாளர் உட்பட 7 பேரையும் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுகவின் இரு நிர்வாகிகள் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், மறைமுக தேர்தலின் முடிவில் திமுகவைச் சேர்ந்த 25வது வார்டு உறுப்பினர் அய்யம்மாள் நகர்மன்றத் தலைவராக தேர்வு பெற்றார். இவருக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட் டுள்ளனர். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 20 வார்டில் திமுக கூட்டணியும்,6 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தது. இதில் 25வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற அய்யம்மாள் என்பவரை திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு அக்கட்சி தலைமை போட்டியிட அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று நகர்மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலானது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்த 19வது வார்டு உறுப்பினரான செண்பகம் என்பவர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட அய்யம்மாளுக்கு எதிராக போட்டியிட்டார். முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட 25வது வார்டு உறுப்பினரான அய்யம்மாள் மொத்தமுள்ள 27 ஓட்டுக்களில் 16 ஓட்டுக்கள் பெற்று நகர்மன்றத் தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செண்பகம் 11 ஓட்டுகளை பெற்று தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் சின்னமனூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் 7 பேர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகர்மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாக்களித்ததால் சின்னமனூர் 10வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் ஜெகதீஸ், 13வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் உமாராணி, 14வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் கவிதா ராணி, 18-வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் பிச்சை, 22வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் செல்வி, 26வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் தவசி, சின்னமனூர் நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது….

The post திமுகவிற்கு வாக்களித்ததால் நகர செயலாளர் உட்பட 7 நிர்வாகிகள் நீக்கம்: அதிமுக தலைமை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: