ஒருவழிப்பாதை என கூறியதால் ஆத்திரம் மெட்ரோ ரயில் ஊழியரை தாக்கிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ டிரைவர் கைது: கே.கே.நகர் போலீஸ் நடவடிக்கை

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக ஆற்காடு சாலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளனர். அந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணியாளர் ஒருவர் போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், ஒரு வழி பாதையில் எதிர்திசையில் செல்ல முயன்றார். அதற்கு  மெட்ரோ பணியாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பைக்கில் வந்த நபருக்கும் மெட்ரோ ரயில் பணியாளருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த நபர், ‘நான் யார் தெரியுமா முன்னாள் அதிமுக எம்எல்ஏ விருகை ரவியின் கார் டிரைவர் முத்து. என்னையை வேறு வழியில் போ என்று சொல்வீயா’ என கூறி மெட்ரோ ரயில் பணியாளர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத மெட்ரோ ரயில் பணியாளர் அதிர்ச்சியில் உரைந்தார். பின்னர் சம்பவம் குறித்து மெட்ரோ ரயில் பணியாளர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ விருகை ரவியின் கார் டிரைவர் முத்து ஒரு வழிப்பதையில் வந்து வீண் தகராறு செய்து மெட்ரோ ரயில் பணியாளரை தாக்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மெட்ரோ ரயில் பணியாளரை தாக்கிய முன்னாள் அதிமுக எல்எல்ஏ விருகை ரவியின் கார் டிரைவர் முத்து மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்திய ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்….

The post ஒருவழிப்பாதை என கூறியதால் ஆத்திரம் மெட்ரோ ரயில் ஊழியரை தாக்கிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ டிரைவர் கைது: கே.கே.நகர் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: