திறந்தவெளி கண்காட்சி பணிகள் நிறைவு கீழடியை பார்வையிட இன்றுமுதல் அனுமதி

திருப்புவனம்: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தன. இந்த அகழாய்வு தளங்கள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததுடன் நேரிலும் பார்வையிட்டார். தற்காலிகமாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் மழைநீர் வடிகால் வசதி, இடையூறு இன்றி பார்வையிட விசாலமான ஷெட், தடுப்புச்சுவர்கள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று (பிப். 24) முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஏழாம் கட்ட அகழாய்வில் கீழடியில் 8 குழிகள் தோண்டப்பட்டு சிவப்பு நிற பானை, மீன் உருவம் பதித்த உறைகிணறு, மண் கிண்ணங்கள், தந்த பகடை, சுடுமண் பகடை, வெள்ளி முத்திரை நாணயம், செப்பு காய்கள், பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன. தற்போது அகழாய்வு குழிகளில் உள்ள பானைகள், உறைகிணறுகள், மண் கிண்ணங்களை பார்வையாளர்கள் நேரில் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்….

The post திறந்தவெளி கண்காட்சி பணிகள் நிறைவு கீழடியை பார்வையிட இன்றுமுதல் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: