திருமணம் செய்ய மாட்டேன்: சதா பிடிவாதம்

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘ஜெயம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை சதா. ஜெயம் திரைப்படம் தமிழில் 2002ல் வெளியாவதற்கு முன்பே தெலுங்கில் ‘தேஜா’ எனும் பெயரில் வெளியாகி இருந்தது. அதிலும் சதாவே நடிகர் நித்தினுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தார். இந்நிலையில் கடைசியாக தமிழில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக ‘எலி’ எனும் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒருசில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் அவர் வெப் சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சினிமாவை தவிர இவருக்கு சொந்தமாக உணவகமும் இருக்கிறது. 39 வயதான நிலையில் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், திருமணம் செய்து கொண்டால் சுதந்திரம் போய்விடும். திருமணம் செய்பவர் ஒருவேளை என்னை புரிந்து கொள்ளலாம் அல்லது புரியாமல் இருக்கலாம். நான் வைல்ட் லைஃப்யை நேசிக்கிறேன். திருமணம் செய்து கொண்டால் என் ஆசைகளை தொடர முடியாமல் போகலாம்.

The post திருமணம் செய்ய மாட்டேன்: சதா பிடிவாதம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: