மகான் படத்தில் காந்தியை கோட்சே கொன்றதாக சொன்ன வசனத்துக்கு தடை: டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் பகீர்

சென்னை: மகான் படத்தில், காந்தியை கோட்சே கொன்றதாக சொல்லும் வசனத்துக்கு சென்சார் போர்டு தடை போட்டதாக, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறி இருக்கிறார்.விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா நடித்த படம், மகான். இது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு வசனம் பற்றி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:மகான் படத்தின் கிளைமாக்சில் வில்லனை பார்த்து, ‘உங்களை மாதிரி கொள்கை வெறி பிடிச்சவன்தான்டா காந்தியை கொன்றான்’ என்ற வசனம் வரும். இதை பார்த்துவிட்டு வசனத்தை மாற்றும்படி சென்சார் போர்டு அதிகாரிகள் கூறினார்கள். ‘காந்தி கொல்லப்பட்டார் என்று சொல்லலாம். காந்தியை கோட்சே கொன்றார் என்று சொன்னால் பிரச்னை வரும்’ என்றார்கள். இது எனக்கு அதிர்ச்சியை தந்தது. காந்தியை கோட்சே கொன்றார் என்று சொன்னால் கோபப்படும் நபர்கள் இந்த ஊரில் இருக்கிறார்கள். அதை எதிர்க்க, பிரச்னையை கிளப்ப ஒரு கும்பல் இருக்கிறது. இது வேதனையான விஷயம். அதனால்தான் மகான் படத்தில் வசனத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் கூறினார்….

The post மகான் படத்தில் காந்தியை கோட்சே கொன்றதாக சொன்ன வசனத்துக்கு தடை: டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் appeared first on Dinakaran.

Related Stories: