பிரசாரத்தின் கடைசி நாளில் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்கள்

திண்டுக்கல்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 15வது வார்டில் திமுக சார்பில் குருசாமி, அதிமுக சார்பில் ஜெனகைராஜன், பாஜ சார்பில் மலைச்சாமி உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று அதிமுக வேட்பாளர் ஜெனகைராஜன், அக்கட்சியிலிருந்து விலகி, எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூர் செயலாளர் முனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூராட்சி 2வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணிவேல், அதிமுக 2வது வார்டு கிளை பொருளாளர் பெருமாள் ஆகியோர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் அதிமுக வேட்பாளர்கள், திமுகவில் இணைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post பிரசாரத்தின் கடைசி நாளில் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: