‘தான்தான் உலகின் இனிமையான தீவிரவாதி’!: பகத்சிங்கை அக்காலத்தில் தீவிரவாதி என்றே அழைத்தார்கள்..அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டல்..!!

டெல்லி: பிரிவினைவாத கருத்துகளை தெரிவித்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தான்தான் உலகின் இனிமையான தீவிரவாதி என அவர் கூறியுள்ளார். இந்தியாவில் பஞ்சாப்பில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இதனால் மீண்டும் பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜேபிநட்டா, ஒன்றிய அமைச்சர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பஞ்சாபில் ஆட்சி அமைக்‍க ஆம் ஆத்மி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தசூழலில், தனி மாநிலத்தின் பிரதமராக வருவது குறித்து ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் தன்னிடம் பேசியதாக, அக்‍கட்சியின் முன்னாள் முக்‍கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கெஜ்ரிவால் பிரிவினைவாத கருத்துகளை கூறி வருவதாக பா.ஜ.க.வும் குற்றம்சாட்டியது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீது தேசவிரோத வழக்‍கு பதிவு செய்யப்படவுள்ளதாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர் மிரட்டியதாக தெரிவித்தார். தன்னை தீவிரவாதி என சொல்வது நகைப்புக்‍குரிய விஷயம் என்றும், அப்படியானால், பிரதமர் மோடி தன்னை ஏன் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். தான்தான் உலகின் இனிமையான தீவிரவாதி எனக்‍ கூறிய கெஜ்ரிவால், அக்‍காலத்தில் பகத்சிங், தீவிரவாதி என்றே அழைக்‍கப்பட்டார் என குறிப்பிட்டார். பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், சாலைகள், தண்ணீர் போன்றவற்றை மக்களுக்கு வழங்கும் தீவிரவாதியாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி முதலில் என்னை பயங்கரவாதி என்றார், அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி என வரிசைகட்டி என்னை தீவிரவாதி என்று அழைப்பது சிரிப்பாக இருக்கிறது என குறிப்பிட்டார். …

The post ‘தான்தான் உலகின் இனிமையான தீவிரவாதி’!: பகத்சிங்கை அக்காலத்தில் தீவிரவாதி என்றே அழைத்தார்கள்..அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டல்..!! appeared first on Dinakaran.

Related Stories: