‘காடப்புறா கலைக்குழு’வில் கரகாட்டம்

கதை நாயகர்களாக முனீஷ்காந்த், காளி வெங்கட் நடித்துள்ள படம், ‘காடப்புறா கலைக்குழு’. சக்தி சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரித்துள்ளனர். ராஜா குருசாமி இயக்கியுள்ளார். வரும் 7ம் தேதி படம் திரைக்கு வருகிறது. படம் குறித்து காளி வெங்கட் கூறுகையில், ‘இது எனக்கு மிகவும் முக்கியமான படமாகும். இதன் இயக்குனரை குறும்படம் உருவாக்கிய காலத்திலிருந்தே எனக்கு தெரியும்.

இப்போது அவர் படம் இயக்கியது குறித்து அளவற்ற மகிழ்ச்சி. அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. முனீஷ்காந்த் கரகாட்டம் ஆடியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சி. படத்தின் டிரைலரைப் பார்த்த தனுஷ் என்னையும், முனீஷ்காந்தையும் பாராட்டினார்’ என்றார். முனீஷ்காந்த் கூறும்போது, ‘முதல்முறையாக நான் கரகாட்டம் ஆடியிருக்கிறேன். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது’ என்றார்.

The post ‘காடப்புறா கலைக்குழு’வில் கரகாட்டம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: