ஹிஜாப் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த கட்சியினருக்கு நன்றி மதச்சார்பின்மைக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: ஜவாஹிருல்லா அறிக்கை

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  ஹிஜாப் விவகாரத்தில் பாஜ அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி. தமிழ்நாடு என்றென்றும் மதச்சார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் முன்மாதிரி மாநிலம் என்பதற்கு உதாரணமாக இந்து சமயச் சான்றோர்களும், கிறிஸ்தவ சகோதரர்களும் அவர்களுடைய பெண் குழந்தைகளுக்கு ஹிஜாப் அணிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு ஆதரவு தெரிவிக்கும் சூழல் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. அரசியல் சாசனச் சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். …

The post ஹிஜாப் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த கட்சியினருக்கு நன்றி மதச்சார்பின்மைக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: ஜவாஹிருல்லா அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: