கும்பாபிஷேக விழாவில் குவிந்த பக்தர்கள்

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசையில்  அமைந்துள்ள ஸ்ரீசீதளாம்பிகா  ஸமேத மனோனு கூலேஸ்வரர் எனும் குளிர்ந்த நாயகி ஸமேத ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  காலை 9:30  மணியளவில், ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், பிறகு 10:20 மணியளவில் பரிவாரங்கள் மற்றும் மூல லிங்க மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றன. இந்த கும்பாபிஷேக வைபவத்தை சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் சமேத ஸ்ரீ கமடேஸ்வரர் திருக்கோயில் சிவஸ்ரீ டாக்டர் டி.எஸ்.சண்முக சிவாச்சாரியார் சர்வ சாதகம் ஏற்று நடத்தி வைத்தார். இந்த  மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் டி.துரைராஜ் செங்குந்தர், டி.டி.ராமமூர்த்தி செங்குந்தர், எஸ்.சிவானந்தம் செங்குந்தர், டி.பழனிச்சாமி செங்குந்தர், டி.மோகனன் செங்குந்தர் மற்றும் செங்குந்தர் மகாசபை உத்தரவுப்படி திருக்குட முழக்கு நன்னீராட்டு திருவிழாக்குழு  தலைவர்கள் டி.எஸ்.சண்முகம் செங்குந்தர், டி.டி.கதிர்வேலு செங்குந்தர், டி.எஸ்.உமாசங்கர் செங்குந்தர் மற்றும் உறுப்பினர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஒன்றியக்குழு தலைவர் பூவை  எம்.ஜெயக்குமார் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவ டி.தேசிங்கு, திமுக நகர செயலாளர் தி.வே.முனுசாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் உ.வடிவேலு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்….

The post கும்பாபிஷேக விழாவில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: